December 11, 2017

கணினி வைரஸ்கள்: உங்களுக்குத் தெரிந்த அனைத்துமே

1949 இல் ஹங்கேரிய - அமெரிக்க விஞ்ஞானியான Johnvon Neumann theorized என்பவரால் எழுதப்பட்ட self - replicating program ஆனதே நாளடைவில் நாம் அறிந்த வைரஸ் என்பதாகும். இந்த ப்ரோக்ராம் செயல்பட ஒரு ஹோஸ்ட் தேவை. பாதிக்கப்பட்ட கணினிகளில் அங்கீகரிக்கப்படாத மற்றும் விரும்பத்தகாத மாற்றங்களை செய்ய இவ் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வைரஸ் ஆனது உருவாக்கப்பட்டதும் பரீட்சிக்கபட்டதும் ஒரு பல்கலைக்கழக கணினி ஆய்வு கூடத்திலாகும். இந்த காலத்தில் எழுதப்பட வைரஸ்கள் floppy disk மூலமாக பரப்பப்பட்டன. எனவே ஒரு முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலை அவ்வேளை இது ஏற்படுத்தவில்லை.

இணையத்தளத்தின் மூலம் வைரஸ்கள் எப்போதிருந்து  பரவி வருகின்றன?
ஆரம்பத்தில் மிகப்பெரிய தாக்குதல் 1999 ம் ஆண்டு அமெரிக்கவை சேர்ந்த David L Smith என்பவரால் Melissa virus எனும் பெயரில் ஈமெயில் மூலமாக வைரஸ் பரப்பிவிடப்பட்டது. இங்கு Melissa என்பது ஒரு கவர்ச்சியான நடன கலைஞரின் பெயரை குறித்து நிற்கின்றது. இவ் வைரஸ் ஆனது வேர்ட் (Word) ஆவணம் மூலம் இணைத்து ஈமெயிலினூடாக அனுப்பப்பட்டது. ஒரு தடவை இதனை திறந்தால் இது இரட்டிப்பாகி தனக்குத்தானே மற்றவர்களுக்கு இவ் வைரஸினை அந்த ஈமெயிலிலுள்ள address book இல் இருப்பவர்களுக்கு அனுப்பி விடும்.


Worm ஆனது எவ்வாறு வைரஸிலிருந்து வேறுபடுகின்றது
Worm இற்கு ஒரு ஹோஸ்ட் ப்ரோக்ராம் தேவைப்படாது. இது தனக்குதானே நகல் எடுத்து தானே கணினி வலையமைப்பினூடாக அனுப்பக்கூடியது. 2000 ஆம் ஆண்டு மே மாதம் Love Bug, Love Letter or ILOVEYOU என பொதுவாக அழைக்கப்பட்டு worm ஆனது பிலிப்பைன்ஸ் அதனை தொடர்ந்து உலகம் எங்கிலும் இது பரவியது. இது கணினிகளில் file களை நகல் எடுத்து பெருக்கி அதனை வேறுபட்ட இடங்களில் மறைத்து வைக்கும் தன்மை கொண்டது.

malware, ட்ரோஜன் ஹார்ஸ் மற்றும் ஸ்பைவேர் என்றால் என்ன?
கணினிக்கு தீங்கிழைக்கும் அனைத்து வகையான மென்பொருட்களும்  Malware என்ற பொதுவான ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இதனுள் இது வைரஸ்கள், Worm, ட்ரோஜன் ஹார்ஸ், ஸ்பைவேர் மற்றும் பலவற்றை இது உள்ளடக்குகின்றது. ட்ரோஜன் ஹார்ஸ் ப்ரோக்ராம் ஆனது வெளித் தோற்றத்தில் நல்ல ப்ரோக்ராம் போலத் தோற்றமளிக்கும் இது உண்மையில் பலமான அழிவை உண்டாக்கும் ப்ரோக்ராம் ஆகும். இவை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்பியூட்டரில் உள்ள தனிப்பட்ட தகவல்களை எடுத்து இந்த புரோகிராம் அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். ஒரு ட்ரோஜன் பயன்மிக்க நோக்கங்களுக்காகவும்  பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, 2007 இல் ப்ரோக்ராம் Developers இனால் வெளியிடபட்ட Strom Worm இனை ட்ரோஜன் ஹார்ஸ் அடையாளம் காட்டியது. இது ஈமெயிலினூடாக Weather Disaster எனும் தலைப்பில் பின்வரும் தகவலுடன் "230 dead as storms batters Europe." இது பரவியது.
ஒரு தடவை இவ் ட்ரோஜன் ஹார்ஸ் திறக்கபட்டால் இது தானாகவே கணினியில் இன்ஸ்டால் செய்யப்படுவதோடு hackers இலகுவாக உள்வர வழிவகுக்கின்றது.

Ransomware என்றால் என்ன?
இது சைபர் கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான malware ஆகும். ஒரு கணினியில் இது நிறுவப்பட்டபின்னர் ட்ரோஜன் கணினியில் ransomware இனை நிறுவுகிறது. நிறுவப்பட்ட ransomware ஆனது கணினியில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்களை குறியாக்கம் (Encrypt) செய்கின்றது. இங்கு குறியாக்கம் என்பது தரவுகள் மற்றும் தகவல்களை cipher அல்லது code முறைக்கு மாற்றுதல் என்பதாகும். பின் பாதிக்கப்பட்டவருக்கு கணினி திரையில் எச்சரிக்கையுடன் கூடிய கோரிக்கைகள் விடுக்கப்படும். உங்களது கணினிகளிலுள்ள தரவுகளை பயன்படுத்த நீங்கள் Bitcoin மூலம் பணம் செலுத்த வேண்டும் என்று அவ் எச்சரிக்கை விடுக்கப்படும்.

Bitcoins என்பது அறியப்படாத புரோகிராமர் அல்லது Satoshi Nakamoto என அழைக்கப்படும் புரோகிராமர்கள் குழு மூலம் எழுதப்பட்ட ஒரு டிஜிட்டல் பண பரிவர்த்தன முறையாகும். இது மக்களுக்கிடையே பண பரிமாற்றம் செய்ய எந்தவொரு உலக நிதி அமைப்புகளையும் சார்ந்து இருப்பதில்லை எனவே இப் பண முறையில் யாருக்கு பணம் பரிமாற்ற படுகின்றது என்பதனை கண்டு பிடிப்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.

சமிப்பத்தில் microsoft மென்பொருளிலுள்ள குறைபாட்டினை பயன்படுத்தி “Wannacry” ransomware ஆனது ஊடுருவி பயனர்களின் கணினிகளில் தாக்கி இருந்தது குறிபிடத்தக்க ஒரு விடயமாகும். இக் குறைபாடு தற்செயலாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை நிலையதினால்  கண்டு பிடிக்கப்பட்டு  பின்னர் அது hackers இவ் விடயம் கசிந்ததாக குறப்படுகின்றது.

0 comments:

Post a Comment